May 1, 2016

இட்லி மாவு பாக்கெட் வாங்கினால் புழுவும் பாக்டீரியாவும் இலவசம்!



தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாகி விட்டன இட்லி மாவு பாக்கெட்டுகள். 
பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எங்கும் கிடைக்கக் கூடியது. எளிதாக வேலை முடிகிறது என்பதால் பலரும் விரும்பக் கூடியதாக இருக்கிறது. ஆனால், இவை எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
பொது மருத்துவர் அர்ச்சனா முன் வைக்கிற கருத்துகளை கேட்டால் இட்லி மாவு பாக்கெட்டுகளை கனவில் கூட நினைக்க மாட்டோம்!‘‘தென்னிந்திய உணவு... பாதுகாப்பான உணவு என்பது இட்லி, தோசையின் பெரிய ப்ளஸ். அரிசியின் மூலம் நிறைய கார்போஹைட்ரேட்டும், உளுத்தம்பருப்பில் இருந்து புரதமும், 
இட்லி-தோசையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஆவியில் வேக வைத்து இட்லி சாப்படுவதால் ஜீரணமாவதும் எளிதாகிவிடுகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கூட இதைக் கொடுக்கிறார்கள். இவையெல்லாமே அந்த மாவு தரமாகத் தயாராகும் பட்சத்தில்தான்!
கடைகளில் நாம் வாங்குகிற மாவு பாக்கெட்டுகள் பல விதங்களிலும் சந்தேகத்துக்குரியவையே.முதலாவதாக, அரிசியின் தரத்திலேயே கடைக்காரர்கள் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு. அரிசியில் கல் இருந்தாலோ, புழு இருந்தாலோ நீக்கிவிட வேண்டும்... அரிசியை சுத்தமாகக் கழுவ வேண்டும். கிலோ கணக்கில் அரிசியைக் கொண்டு மாவு அரைக்கிறவர்கள் இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருக்க நிறைய வாய்ப்புண்டு. இதேபோல, உளுத்தம்பருப்பிலும் தரம் குறைந்ததைப் பயன்படுத்தலாம். 
முக்கியமாக எந்த அளவு சுகாதாரமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், எந்த மாதிரியான இடங்களில் தயாரிக்கிறார்கள், மாவு அரைக்கிற பாத்திரங்களின் சுத்தத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்களா என்பதும் கேள்விக்கு உரியதுதான். வீட்டில் மாவு அரைத்த பிறகு கிரைண்டரை கழுவி காய வைத்த பிறகுதான், அடுத்த முறை பயன்படுத்துவோம். ஆனால், அவர்கள் தினமும் பயன்படுத்துவதால் முறைப்படி காய வைத்த பிறகு மாவு அரைப்பதற்கும் வாய்ப்பு குறைவு.
இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்றால் மாவு புளிக்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் மாவு புளித்துவிட்டால் அதிக நாட்கள் தாங்காது. இதனால் புளிக்காமல் இருக்கவும், இட்லி சாஃப்ட்டாக இருக்கவும் சோடா உப்பு கலப்பார்கள். இதன் மூலம் மாவு நுரைத்து அளவும் அதிகமாக இருக்கும். கடைக்காரர்களுக்கு இதுவும் ஒருவகையில் லாபம்.
இட்லி மாவு கெட்டுப் போகாமல் இருப்பதற்காகக் கலக்கப்படும் சோடா உப்பு உள்பட சில கெமிக்கல் பிரிசர்வேட்டிவ்கள் பலருடைய உடல்நிலைக்கு ஏற்றுக் கொள்ளாது. அல்சர், அசிடிட்டி, ஃபுட் பாய்ஸன் என பல உடல்நலக் கோளாறுகள் இதனால் வரலாம். 
மாவு அரைக்கிறவர்களின் சுத்தமற்ற கைகளின் வழியாக Pin worm, Hook worm போன்ற புழுக்களும் மாவில் கலக்கும். பலர் கைகளில் நகத்தைக் கூட வெட்டுவதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை வரக்கூடும். எனவே, எல்லா கோணத்திலும் வெளியிடங்களில் விற்கப்படும் மாவு சிக்கல்தான்’’ என்கிறார் டாக்டர் அர்ச்சனா. 
``இட்லி மாவு பாக்கெட்டுகள் பயன்படுத்துவதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், தரக்குறைவானவையாக இருக்கலாம் என்பதால் முடிந்த வரைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் உணவியல் நிபுணரான கௌதமி ராஜேந்திரன்.
‘ஹோட்டல் உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் தவிர்க்கச் சொல்வதைப் போலவே கடைகளில் விற்கப்படும் இட்லி மாவு பாக்கெட்டுகளையும் மருத்துவர்கள் தவிர்க்கவே சொல்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ‘இட்லி மாவு பாக்கெட் பயன்படுத்திய ஒரு குடும்பமே பலியானது’ என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. 
அதற்கு முழுமையான காரணம் இட்லி மாவுதானா என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், கடைகளில் விற்கப்படும் மாவில் அதற்கு இணையான ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும்போது கொசு விழுந்துவிட்டால் மாவுடன் சேர்த்து கொசுவை எடுத்துப் போடுவோம். ஆனால், கடைகளில் கொசுவை மட்டுமே எடுத்து வெளியில் போடுவார்கள். 
வீடுகளில் மாவு அரைக்கும்போது பெரும்பாலும் உளுந்து, வெந்தயம் தவிர வேறு எதையும் சேர்க்க மாட்டோம். ஆனால், கடைகளில் விற்கப்படும் மாவில் வெள்ளை நிறத்துக்காகவும், இட்லி உப்பலாக வரவேண்டும் என்பதற்காகவும் நிறைய கலப்படங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல சங்கடங்கள் கடைகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட்டுகளில் உள்ளது.
இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு வீட்டிலேயே மாவு அரைத்து வைத்துக் கொள்வது நல்ல வழி. உடனடியாகப் பயன்படுத்துகிற மாவுக்கு உப்பு சேர்த்தும், அடுத்தடுத்த நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மாவுக்கு உப்பு சேர்க்காமலும் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதற்காக, நீண்ட நாட்களுக்கும் மாவு வைத்துக் கொள்வதும் தவறு. 5 நாட்கள் வரை தேவையான மாவை அரைத்து வைத்துக் கொள்ளலாம். 
தவிர்க்கவே முடியாத பட்சத்தில், உங்கள் நம்பிக்கைக்குரிய இடத்தில் மட்டும் மாவு பாக்கெட் வாங்கிப் பயன்படுத்துங்கள். முன்பின் தெரியாத இடங்களில் மாவு வாங்கிப் பயன்படுத்தாமல் இருப்பதே உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்று எச்சரிக்கிறார் கௌதமி. 
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
திருநெல்வேலி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம்...‘‘தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடைகளில் விற்கப்படும் மாவு எந்த அளவுக்குத் தரமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய சோதனை ஒன்று நடத்தியது. அந்த சோதனையில் E.coli என்ற பாக்டீரியா கடைகளில் விற்கப்படும் மாவில் நிறைய இருப்பதாகத் தெரிய வந்தது. கழிவறை சென்ற பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். 
உணவுப்பொருட்களைக் கையாள்கிறவர்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாத பட்சத்தில்தான் இந்த பாக்டீரியா உணவில் பரவுகிறது. இதிலிருந்தே இட்லி மாவு பாக்கெட்டுகள் எந்த அளவுக்கு சுகாதாரமானவை என்பதை யோசித்துக் கொள்ளலாம்.தவிர்க்க முடியாத நேரத்தில் மாவு பாக்கெட்டுகள் வாங்கும்போது மாவு தயாரிக்கிறவர்களின் நம்பகத்தன்மை, தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டிருக்கிறதா, முறையாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். 
ஒரு இடத்தில் தரமில்லாமல் மாவு தயாரிக்கப்படுகிறது என்று சந்தேகப்படும் பட்சத்தில், அந்த மாவின் மாதிரியை சேகரித்து பில்லுடன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கலாம். சென்னையில் இருக்கும் கிங் இன்ஸ்டிடியூட் உள்பட கோயமுத்தூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, பாளையங்கோட்டை என 6 இடங்களில் உணவு பகுப்பாய்வுக்கூடங்கள் இருக்கின்றன. இந்த பரிசோதனை நிலையங்களில் தரக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் அரசு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 
கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா இடங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் இருக்கிறார்கள். நகராட்சியில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களிடமும் புகார் அளிக்கலாம்.’’
மாவு அரைக்கிறவர்களின் சுத்தமற்ற கைகளின் வழியாக புழுக்களும் மாவில் கலக்கும். பலர் கைகளில் நகத்தைக் கூட வெட்டுவதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை வரக்கூடும். எனவே, எல்லா கோணத்திலும் வெளியிடங்களில் விற்கப்படும் மாவு சிக்கல்தான். 

நீங்கள் அருந்தும் பால் துாய்மையானதா....ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள், மற்ற விலங்குகள் என்ற வித்தியாசமில்லை. சென்னையில் பால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர்.
எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான். இந்த வரிசையில், மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால், மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி.
சென்னையில் மட்டும் 20,000 முதல் 25 ஆயிரம் மாடுகள் வரை இவ்வாறு ஆக்சிடோசின் கொடுத்து பால் கரக்கப்படுவதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் சுதாகரிடம் பேசினோம்.
“ ஆக்சிடோசின் என்பது மாடுகளுக்கு பால் சுரப்பதற்காக, அதன் பால்சுரப்பிகளை ஊக்குவித்து பாலை சுரக்கச்செய்யும் ஒரு ஹார்மோன் மருந்து. இந்த மருந்து, மாட்டின் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நேரடியாக பாலில் கலக்கும். தொடர்ந்து இந்த பாலை அருந்தும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உடல் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பெண்குழந்தைகள் 8 லிருந்து 10 வயதுக்குள் பருவமடைவர். பெண்களின் உடலில், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
தொடர்ந்து பல வருடங்கள் இந்த பாலை எடுத்துக்கொள்ளும் பெண்கள், மலட்டுத்தன்மை அடைந்து குழந்தைபெறும் தகுதியற்றவர்களாகிவிடுவதும், பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் என்ற நிலையை எட்டிவிடுவர் என்பதும் இதன் விபரீதமான விளைவுகள். இதனால் ஹார்மோன் ஊசி, மாடுகளுக்கு போட தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவசியமான நேரங்களில் தேவையை கருதி மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் இதை பயன்படுத்தலாம். 
ஆனால் இது, சாதாரண தவிடு விற்கும் கடைகளில் கூட சர்வசாதாரணமாக கிடைக்கிறது. தவிடு வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் இந்த மருந்தை தருவதும் கூட சில இடங்களில் நடக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் தினந்தோறும் மாடுகளுக்கு இந்த ஊசியை போடுவது சென்னையில் அதிகரித்திருக்கிறது. இந்த ஊசியை போட்ட 10 நிமிடத்தில் மாட்டிற்கு பால் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பேராசைக்கார மனிதர்கள் மாட்டின் கடைசி சொட்டுபால் வரை கறந்துவிடுகின்றனர்.
தொடர்ந்து பாலுக்காக இந்த ஊசியை மாட்டின் உரிமையாளர்களே போடுகின்றனர். முறையான பயிற்சியின்றி தினந்தோறும் அவர்கள் போடும் ஊசிகளால் மாட்டின் பின்பகுதி மரத்துப்போய், பின்னாளில் மாட்டிற்கு உடல்நலக்குறைவு வரும்போது அதற்காக ஊசிகள் போடும்போது, அதை மாட்டின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும்” என அதிர்ச்சி தந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக மற்ற நகரங்களைவிட சென்னையில் பால்நுகர்வோருக்கு இயல்பாகவே பல சிக்கல்கள் உண்டு. கிராமங்களில் உள்ளதுபோல மாடுகளை உணர்வுப்பூர்வமாக இங்கு வளர்ப்பதில்லை. பெரும்பாலும் இங்கு வணிக நோக்கத்திலேயே வளர்க்கப்படுகின்றன. இதனால் அவைகளுக்கான முறையான உணவுகள் தரப்படுவதில்லை. பொதுவாக மாடுகள் தவிடு, கடலை புண்ணாக்கு, வைக்கோல், புல் இவைகளையே உண்ணும். ஆனால் சென்னையில் மாடுகளுக்கு மலிவு விலை அரிசி உணவாக தரப்படுகிறது. மற்ற நேரங்களில் அதன் உணவு செலவை குறைப்பதற்காக மாடுகளை தெருக்களில் திரிய விடுகின்றனர்.
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு பெரும்பாலும் உணவு சுவரொட்டிகள். சுவரொட்டியை உண்ணும்போது அதன் பின்புறம் உள்ள பசையையும் சேர்த்து உண்ணுகிறது. அதில் உள்ள வேதிப்பொருள் தொடர்ந்து மாட்டின் உடலில் சேகரமாகி, அது தரும்பால் விஷமாகும் அபாயம் உருவாகிறது. இந்த பாலை அருந்துபவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். 
அதுமட்டுமின்றி சமயங்களில் பிளாஸ்டிக் பைகளில் நாம் வீசும் மிச்சமான உணவை அப்படியே மாடுகள் உண்ணும். இதனால் அந்த மாடுகள் தரும் பால் விஷத்தன்மையாகி அதை உண்பவர்கள் பாதிப்புக்குள் ளாவார்கள். மாடுகளுக்கு இது குமுளேடிவ் (Cumulative) பாய்சன் என்பார்கள். மாடுகளுக்கு இதன் பாதிப்பு உடனே தெரியாது. பிளாஸ்டிக் தொடர்ந்து உண்ணும் மாடுகள், பல வருடங்களுக்கு பிறகு ஒருநாள் திடீரென வயிறு உப்பி இறந்துவிடும். இறக்காமல் நோய்வாய்ப்படும் மாடுகள் பிழைக்க அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு.
ஆனால் வணிக நோக்கமுள்ள அதன் உரிமையாளர்கள், அறுவை சிகிச்சை செய்து மாடு பிழைக்கவில்லையென்றால் நட்டம் எனக்கருதி அந்த நிலையிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்றுவிடுவர்.ஆனால் கிராமங்களில் மாடுகளை உணர்வுப்பூர்வமான உறவாக கருதுவதால் அவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அழைத்துவருவர்” என்றார்.
இயற்கையான பாலையும் மனிதர்கள் தங்கள் பேராசையினால் நஞ்சாக்குவதால், எதிர்காலத்தில் நோயாளி சமுதாயத்தை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உணவுகளும் நஞ்சாகும் உச்சகட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளிம்பில் நிற்கிற மனித சமூகம், அதற்கான மாற்றை தேடவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் பிரதான உணவான பாலிலும் நஞ்சு என்ற நிலையில், நாம் குழந்தைகளுக்கு பாலை தவிர்த்து பாலில் உள்ள சத்துக்களைவிட அதிகம் கூடுதல் சத்துக்கள் கொண்ட கேழ்வரகு பால், சத்து மாவு கஞ்சி மற்றும் தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்ப்பால் போன்றவற்றை இனி தர முயற்சிக்கலாம். பெரியவர்களும் அவ்வாறே கருப்பட்டி காபி, மூலிகை தேனீர், என மாற்று உணவுகளை சிந்திக்கலாம்.
நாம் விழிக்க வேண்டிய தருணமிது...!

Mobile food testing lab evokes positive response


The laboratory was set up by the Chandigarh health department with an aim to spare the residents from ordeal of running from pillar-to-post for getting the food samples tested.
A month after it was launched in Chandigarh, the Mobile food testing laboratory has tested around 100 food samples till now.
The laboratory was set up by the Chandigarh health department with an aim to spare the residents from ordeal of running from pillar-to-post for getting the food samples tested.
“The laboratory has tested approximately 100 samples brought to us by 92 people from across the city”, Sukhwinder Singh, designated officer of the Food Licensing Authority told Chandigarh Newsline. According to the records maintaned by the department, 15 out of 70 milk samples, which were tested by the specialised Eco Milk machine, failed the quality tests owing to a higher amount of water resulting in lesser fat and nutrition content, while 3 out of 15 turmeric samples have shown presence of artificially added colour. Most of these adulterants like synthetic colour, starch, washing soda and chalk powder present in household products cause diarrhoea, dizziness, stomach ache, vomitting and may even lead to serious illnesses when consumed for a long period of time, officials at the food safety department said.
Talking about the citizen’s response to the laboratory, Sukhwinder said, “While the initiative was started just for Chandigarh citizens, people from Mohali have also come to get their samples checked, which is promising. I would encourage many more people to come and get their samples checked.”

DINAMALAR NEWS