Jun 30, 2014

களை கட்டும் கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனை சிறுவர்களுக்கு சிக்கல் காலாவதி தேதியும் இல்லை


உத்தமபாளையம், ஜூன் 30:
தேனி மாவட்டத்தில் சிறுவர்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுர், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், தேவாரம், கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறுவர்களை கவரக்கூடிய சிப்ஸ் வகைகள், சாக்லெட், தடை செய்யப்பட்ட சீனா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றில் பேக்கிங், காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. விலை குறைவாக விற்க வேண்டும் என்பதற்காக தரக்குறைவான பொருட்களில் இந்த ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு, மக்காச்சோளத்தில் தரம் குறைந்த வகைகளை வாங்கும் சிலர் அதிலிருந்து பாப்கார்ன்களை தயாரிக்கின்றனர். இதை ரூ.2 முதல் 10 வரை குறைந்த விலைக்கு விற்கின்றனர். தரம் உயர்ந்த பாப்கார்ன் அதிகபட்சமாக ரூ.20 முதல் விற்கப்படுகிறது. எனவே, விலை குறைந்த பாப்கார்ன்களை சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக இவைகள் பள்ளிகள் அருகிலேயே அதிகம் விற்கப்படுகின்றன. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுவர், சிறுமியரின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மஞ்சள்காமாலை, புற்றுநோய், குடல் சம்பந்தமான நோய் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளன.
தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஐஸ்கீரிம் கம்பெனிகளும் புற்றீசலாய் பெருகி வருகின்றன. இந்த கம்பெனிகளில் தடை செய்யப்பட்ட சீன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தினந்தோறும் வீதிகளில் உலாவருகின்றன. ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு 20 தினங்களுக்கு மேல் ஸ்டோரேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி பாதிப்பை அடைகின்றனர். இதேபோல் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்று சொல்லப்படும் சீனா மிட்டாய்கள் அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் பெரும்பாலும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். கிராமப்புறங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் சோதனை நடத்துவதில்லை. எனவே, அதிகாரிகள் சோதனை நடத்தி கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனையை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்க வேண்டும் பாட்டில் தண்ணீர் தயாரிப்பு சங்க நிர்வாகிகள் தீர்மானம்


சேலம், ஜூன் 30:
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீரை மட்டும் விற்பனை செய்வது என பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன்(பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள்) நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம், நாமக்கல் மாவட்ட பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் அசோசியேசன் டீலர்கள் கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கௌரவதலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் ஜெயபிரகாஷ், சண்முகம், கதிர்ராசரத்தினம், விஜயன் முன்னிலை வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர் சதாசிவம், தலைவர் அன்பழகன், துணை தலைவர் ராமநாதன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஜெயபிரகாஷ், கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வர், நிரேஷ், கோவிந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டும் குடிநீரை பெற்று விநியோகிக்க வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத குடிநீரை சப்ளை செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு துறையில் டீலர்கள் அனைவரும் அடையாள அட்டையை பெற வேண்டும். டீலர்களுக்கு பொதுகாப்பீடு, விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறியது.

மாம்பழங்களை பழுக்க வைக்க சுகாதாரமான புதிய முறை


கன்னியாகுமரி, ஜூன் 30:
கன்னியாகுமரி தோட்டக்கலை அலுவலர் குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாம்பழங்கள் அனை த்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் அல்போ ன்சா, பங்கனப்பள்ளி, ஹிமாயுதின், நீலம், பெங்க ளூரா, கலப்பாடு போன்ற ரகங்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. அரசு தோட்டக்கலைப் பண்ணை யிலும் இந்த ரகங்கள் பயிர் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை சுகாதார முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறைப்படி பழுக்க வைக்கும் மாம் பழங்கள் சுவையாகவும், மணம் உள்ளதாகவும் இருப்பதுடன் இயற்கையான நிறத்துடன் காணப்படும்.
இந்த புதிய முறைப்படி மாம்பழங்களை பழுக்க வைக்க காற்று புகாத அறைகளில் எத்திரல் என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து 5 இடங்களில் வைக்க வேண்டும்.
இந்த கலவையில் இருந்து எத்திலின் வாயு அதிக அளவில் வெளி வர உதவி செய்யும் வகையில் ஒரு லிட்டர் கலவைக்கு 2 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு மருந்தை கலக்க வேண்டும். மாம்பழங்களின் ரகங்களைப் பொறுத்து 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் நன்றாக பழுத்த மாம்பழங்களைப் பெற லாம்.
இம்முறையில் பழுக்க வைக்கப்படும் மாங்கனிகளுக்கு இயற்கையான பழ மணம் வரும். இம்முறையில் பயன்படுத்தப்படும் எத்திரல் வளர்ச்சி ஊக்கி உர விற்பனை நிலையங்களிலும், சோடி யம் ஹைட்ராக்சைடு சாதா ரண இரசாயன பொ ருள் விற்பனை நிலையங்க ளிலும் கிடைக்கும். இவ்வாறு தோட்டக்கலை அலுவலர் கூறியுள்ளார்.

சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை வயிற்றுப்போக்கு பரவும் அபாயம்


சிவகங்கை, ஜூன் 29:
சிவகங்கை பகுதிகளில் சாக்கரீன் உள்ளிட்ட கலப்பட பதநீர் விற்பனை செய்யப்படுவதால் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலங்களில் குளிர் பானம், பழ ஜூஸ், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றின் விற்னை அதிகரிக்க தொடங்கிவிடும். வெயில் சூட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் மேற்கண்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
சிவகங்கை பகுதியில் பனை மரங்கள் அதிகம் என்பதால் ஊருக்கு வெளியே சாலையின் இரு புறங்களிலும் நுங்கு விற்பனை நடந்து வருகிறது. வாகனங்களில் வைத்து நகர்ப்பகுதிக்குள் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான பானம், உடல் சூட்டை தணிக்கும் என்ற நம்பிக்கையில் பதநீரை வாங்கி குடிக்கின்றனர்.
ஆனால் சிலர் இருக்கின்ற பதனீரை கூடுதலாக்க வேண்டும் என்ற ஆசையில் பதனீரில் சாக்கரீனையும் கலக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே பதநீரை வாங்கி குடிக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கையை சேர்ந்த கண்ணன் கூறுகையில்..முன்பு அதிகமான அளவில் பதநீர் எடுக்கப்படும். தற்போது குறைந்த அளவிலேயே பதநீர் எடுக்கின்றனர். இதனால் பதநீர் பற்றாக்குறையை ஈடுகட்ட கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர். சாக்கரீன் கலந்த பதநீர் தற்போதுள்ள வெயில் சூட்டால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே அதில் கலப்படம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் சோதணை செய்ய வேண்டும் என்றார்.

மலிவு விலை உணவகங்களில் உணவும் மலிவுதான்


பழநி, ஜூன் 29:
பழநியில் அதிகரித்துள்ள மலிவு விலை உணவகங்களின் தரத்தை கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தின மும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர, சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சொந்த பணிகளுக்காக பழநி வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் தங்களது வேலை முடிவடையும்வரை பழநி நகரில் சுற்றித்திரிய வேண்டி உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களே ஆவர்.
பழநி நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் ஒரு சாப்பாடு ரூ.60க்கு குறைவாக விற்பனை செய்யப்படு வதில்லை. அதுபோல் கலவை சாதங்களும் ரூ.30க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாகவே இருந்து வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக எனக்கூறி பழநி நகரின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் ஏராளமான மலிவு விலை உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் ஆம்னி வேன் போன்ற வாகனங்களின் மூலமும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் அடி வாரம், தாலுகா அலுவலகம், வங்கிகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களின் முன்பு மலிவு விலை உணவு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுபோல் ரயிலடி சாலை, ராஜேந்திர சாலைகளில் ஏராளமான டீக்கடைகளில் தற்போது உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின் றன. இங்கு ஓட்டல்களில் உள்ள உணவுகளின் விலையை விட பாதி அளவே வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த மலிவு விலை உணவுகங்களில் எப்போதும் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
ஆனால், விலை மலிவு என்பது போல், சுகாதாரமும் மலிவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. உணவு தயாரிக்க தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோன்ற மலிவு விலை உணவுகளை உட்கொள்ளும் பலர் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், ‘கடந்த இரு தினங்களுக்கு முன் வாகனத்தில் விற்கப்பட்ட மலிவு விலை உணவகத்தில் சாப்பிட்டேன். முறையாக தயாரிக்காததால் கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்’ என்றார்.
இதுகுறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கத்திடம் கேட்டபோது, ‘உணவகங்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாக இருக்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சோதனை மேற்கொள்ளப்படும். சுகாதாரமில்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் அபாராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

சிவகாசி நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு


சிவகாசி, ஜூன் 29:
சிவகாசி நகராட்சி பகுதியில் சுகா தார மற்ற உணவு பொருட்கள் மற்றும் கலப்பட உணவு பொருட் கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுகக முன்வராததால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுககு முன்பு காலாவதியான குளிர்பானங்களை குடித்த இரண்டு குழந்தைகள் இறநதனர். இந்த சம்பவம் தமழத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது. இதனையடுத்து, டீ கடை, ஓடடல்கள், ஸ்வீட் ஸ்டால், மற்றும் உணவு பொருள் விற்பனை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. சிவகாசி பகுதியில் கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதார துறை ஆய்வாளர்கள கலப்பட பொருட்கள் விற்பனையை தடுப்பதில் போதிய கவனம் செலுத்த வில்லை. சுகாதார துறை அதிகாரிகள் சரிவர சோதனை பணியில் ஈடுபடாததால் காலாவதி உணவு பொருட்கள், கெட்டுபோன கோழ இறச்சி, நோய் வந்த ஆட்டு இறைச்சி, காலாவதி குளிர் பானங்கள், தேத குறிப்பிடாத உணவு பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துளளது. நகராட்சி பகுதியில் பளாஸ்டிக கப், பாலீத்தீன் பை விற்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பொது சுகாதாரம், மற்றும் நோய் தடுப்பு பணிகள் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், டெங்கு, சிககன் குனியா போன்ற நோயகள் பரவுகிறது. சுகாதார துறையின் திட்டத்தில் பள்ளி மாணவர்களுககு மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த பணகளை சுகாதார துறை முறையாக செயல்படுத்துவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதே போன்று நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் அருகில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது, புகையிலை, சிகரெட் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. காலாவதி உணவு பொருடகளை விற்பனை செய்வதை தடுகக சுகாதார ஆய்வாளர்கள் நடவடிககை எடுகக வேண்டும் என பொதுமககள் கோரிககை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஜோதிவேல் கூறுகையல், பொது இடஙகள், பள்ளி அருகே புகையிலை, பானபராக, சிகரெட் விற்க தடை உள்ளது. ஆனால் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை பணியில் முறையாக ஈடுபடாததால் இப் பொருட்கள் விற்பனை படு ஜோராக நடககறது. சிவகாசி நகராட்சி பகுதியல் கலாவதி உணவு பொருட்கள், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமககள் நோய் பாதிப்புககுள்ளாகும் ஆபதது உள்ளது. சுகாதர துறை அதிகாரிகள் கலப்பட உணவு பொருட்கள், சுகதார மற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுகக நடவடிககை எடுகக வேண்டும் என்றார்.

No prosecution of Mehak Spices for one year

DFCO plays with human lives
SRINAGAR, June 29: The Drug and Food Control Organization is playing with the lives of the common masses as it has failed to prosecute Mehak Spices within a year. The turmeric powder of the company was found unsafe for human consumption by Central Food Laboratory Kolkata last year and as per the Food Safety Act prosecution has to be launched within a year.
The Director Central Food Laboratory Kolkata in his communication (No. G 14-6/DO 2013-288 dated 2/5/2013) to the Designated Officer Drug and Food Control Organization District Budgam declared turmeric powder of Mehak Spices as unsafe. “The sample does not conform to the standard laid down under Regulation No. 2.9.18 – of Food Safety and Standards (Food Products and Food Additive) Regulations, 2011 as it shows Copper, Lead and Cadmium contents higher than the prescribed limit. Hence the sample is unsafe food as per Section 3 (1) (zz(iii) of FSS Act, 2006″, reads the laboratory report.
The Designated Officer Drug and Food Control Organization District Budgam took 5 months to write a letter to the Commissioner Food Safety and Standards to seek permission for the prosecution of the owner of the Mehak Spices and two shopkeepers who were selling the turmeric.
In her letter (No DD/FSSA/070/229-233 dated 23-10-2013) the Designated Officer Drug and Food Control Organization District Budgam recommended prosecution of Rohit Arora son of Sham Sunder Arora resident of 405 Akash A Amritsar, Manufacturer of Mehak Spices, Peer Shah Road O/S Gate Hakiman, Amritsar, Punjab and Shopkeepers Showket Ahmad Lone and Lateef Ahmad Sheikh.
The Commissioner Food Safety and Standards took two months to grant permission for the prosecution of the owner of Mehak Spices and the two shopkeepers (Order No. 01-CFS of 2013 dated 30-12-2013).
However, the letter of permission went missing between Commissioner Food Safety and Standards office and Designated Officer Drug and Food Control Organization District Budgam for 5 months.
The Designated Officer Drug and Food Control Organization District Budgam in her reminder letter (No DO/FSSA/070/429-432 dated 10-04-2014) to Commissioner Food Safety and Standards seeks grant of sanction for the prosecution of owner of Mehak Spices and two shopkeepers after 7 months.
The Controller Drug and Food Control Organization sent the Designated Officer Drug and Food Control Organization District Budgam another original copy (No. DFO/FSSA/JK/160/56-57 dated 13-05-2014) of sanction for prosecution of the owner of Mehak Spices and two shopkeepers.
Sources said that the copy of the permission for prosecution was deliberately misplaced so as to favour the Mehak Spices by delaying the prosecution by one year.
The prosecution was launched after one year and the Counsel of the Mehak Spices pleaded for dismissal of prosecution petition against Mehak Spices before the Judicial Magistrate Budgam on the ground that it was launched after one year. Quoting the Section 77 of Food Safety and Standards Act, he pleaded that prosecution can be launched within a year only.

200 kg of stale chicken seized

The city police seized 200 kg of stale chicken from Karuvelippady in an operation carried out along with the Health and Food Safety Departments late on Saturday evening. Police said the chicken was over two months old.
Police arrested Majeed, 50, of Mattancherry, on charge of selling the meat. The stale chicken was found in two autorickshaws outside a cold storage at Karuvelippady. Police said the meat was to be taken to various hotels in Kochi. Police also found stale chicken inside the cold storage, which was licensed to keep only fish.
“The meat is regularly kept in cold storages for months together and sold to hotels in Ernakulam and other districts,” said a police officer. The stale chicken was sold in packets of 2 kg each. A packet was being sold for about Rs.140. Customers also bought smaller quantities as necessary, police said.
The Thoppumpady police have registered a case against Majeed, who was produced in court on Sunday. The Food Safety Department is also taking action against the cold storage owner, Ismail.
The seizure is the latest in a series of arrests made by the city police for storing and selling stale meat. Several kilos of stale chicken, beef, and duck have been seized by the police from different parts of the district. Officials said many hotels and bakeries regularly bought meat from these cold storages as it was cheaper than fresh meat. The quantity of seizures made has raised concern about the widespread use of stale meat in the city. A large amount of the meat food products sold in hotels and bakeries is considered unhealthy.
Experts said the only reason more people weren’t falling ill from consuming the uncertified meat was because of the style of cooking. “The Indian cooking system ensures that disease-causing agents in meat are killed off during preparation. The problem occurs when meat goes into value-added products such as puffs, samosas, and burgers that are not cooked well,” said a veterinary surgeon in the city.

TFSMTA could approach health min for single window for supplement nods

Raising the demand that process of issuing manufacturing licences for nutraceutical products should be made transparent and rationalised, the Tamil Nadu Food Supplement Manufacturers’ and Traders’ Association (TFSMTA) may approach the Union health ministry, requesting it to consider launching a single-window system for giving permissions for the manufacture and sale of food supplements under the Food Safety and Standards Act (FSSA), 2006.
“The association has decided to raise the issue before the government because there is a confusion among manufacturers with regard to FSSA and increasing unwanted expenses which the small scale units are unable to bear,” said K Mohan Kumar, president, TFSMTA. “If the process of licensing is brought under a single-window system, all the hurdles for getting the product approvals (PA) and manufacturing licenses can be solved,” he said.
Kumar said the current method of licensing was cumbersome and prolonged, and it only confused the manufacturers. If all processes were done through a single window, much of the paper work could be reduced and the small-scale units avoid their weekly trips to the Food Safety and Standards Authority of India’s (FSSAI) office in New Delhi. Further, the state government would have a major role in controlling the industry.”No proper guidance on FSSA is given to the industry by the department and the manufacturers are unaware of how to proceed. We need simple and transparent process for getting product approval certificates and manufacturing licences. The PA are issued by separate authorities under FSSA and the manufacturing licences is given by another department. Today’s process is very tedious and expensive, which we cannot afford to,” added he.Regarding levying tax, Kumar said all food supplement products are now charged at 14.5 per cent value-added tax (VAT). The association wants the government to bring it down to a rate of five per cent as the consumers of these products are mainly patients.
For test analysis of a product, the company needs to pay around Rs 15,000 per product and a general fee of Rs 25,000 for product approval for one product. For renewal of licences, FSSA is charging Rs 7,000, whereas the drug department charges only Rs 1,500 to Rs 2,000 for product endorsement.Previously the manufacturers approached the state health authorities for their licence problems, but the process has been shifted to the FSSA office in New Delhi now. This makes several hurdles to the manufacturers, and the whole process would take more than six months.”For the domestic marketing of products, the state government would issue the licence, but for out of state sales, a licence is required from FSSA. Several drug companies are manufacturing food supplements after taking licence from FSSA,” Kumar added.