Jan 5, 2014

Training on safe cooking

The Tamil Nadu Food Safety and Drug Administration Department (Food Safety Wing) has begun a programme to train 7,000 noon meal workers in Government schools and Anganwadi centres in Coimbatore on safe and hygienic cooking practices.Once the training was completed, samples would be taken from cooking centres and tested for quality, officials said.

Food safety wing's lone lab lying defunct

PATNA: The only lab of state food safety wing of health department in Gulzarbagh area is lying defunct. The wing itself is suffering from acute shortage of manpower.
The lab at Gulzarbagh became non-functional after the food analyst retired two years back. The lab did not have the specialist to check the presence of micro-bacteria, if any, in the samples. The food items seized by food safety officials are now sent to Mines Area Development Authority Lab, Dhanbad which charges Rs 200 per sample. Some four months back, the services of a private lab in Kolkata were pressed into service and the department pays Rs 1000 for each sample. The Kolkata lab is accredited by National Accreditation Board for Testing and Calibration (NABL).
According to officials, every food safety inspector has a target of collecting 12 samples per month. The officials, who did not wish to be quoted, admitted that the entire process was cumbersome and, on many an occasion, even the test reports are delayed. Also, spending Rs 1000 per sample is a huge burden.
But the department has lofty plans in the pipeline. It has approved the proposals to set up one lab at every divisional headquarters and a well-equipped super lab in the state capital. The lab at division level is proposed to have 10 staff members including food analysts, technicians and assistants. The super lab will have food analysts who test any adulteration for chemicals, while another specialist will look into bacteria and other harmful microbes. It will be headed by a director. The ball is now in the finance department's court. At present, there are only 14 food safety inspectors against a sanctioned strength of 30. They are expected to look after all the 38 districts of the state. There are nine designated food safety officers who are expected to keep tab on adulteration in all the divisions. "The existing manpower is definitely not enough in implementing the objectives of Food Safety and Standards Act, 2006. So, we have proposed to create new posts in all the ranks," said Sanjay Kumar, state food safety commissioner. The proposal is to create posts of one food safety officer (FSO) at block level and one FSO per one lakh population at town level. Also, two posts of joint commissioners are proposed to be created at the state headquarters to look into legal and enforcement aspects. The food safety officials claim the new set-up will be in place in about a year's time.

Gutka worth Rs 1.16 crore seized in 2013

PUNE: The Food and Drug Administration (FDA) officials have seized gutka worth Rs 1.16 crore in Pune district during 2013. The officials also filed 94 criminal cases in courts for violation of various norms of Food Safety and Standards Act 2006.
The ban on gutka came into force from July 2012. Since then, the FDA officials have seized gutka worth Rs 2.67 crore in Pune district. "We have confiscated gutka worth over Rs 1.16 crore from the Pune city, Pimpri Chinchwad and rural parts of Pune between January 1 and December 31. The maximum amount was confiscated from Pune city. We have started analyzing the area-wise distribution of gutka seized. We would soon come up with a detailed report," said Shashikant Kekare, joint commissioner (food), FDA, Pune. The modus operandi used in selling gutka surreptitiously kept changing over the period. "We have to constantly keep the index of suspicion sharp to foil the bid and nab the offenders," Kakare added.
The officials have lodged 103 FIR at different police stations in Pune district against erring individuals during this period.
"One of the ingenious methods of selling gutka, that emerged following the ban in 2013, was 'supari mix'. The main ingredients in gutka are supari (betelnut) and 'jarda' (flavoured tobacco). These are being sold in separate pouches as 'supari mix', which, when mixed together becomes gutka," Dilip Sangat, assistant commissioner (food), FDA, Pune.
The Maharashtra government had extended the ban on the sale of gutka and paan masala by another year on July 20, 2013. The ban is not just limited to gutka and paan masala, but now also covers scented areca nuts, scented tobacco and all other contents that, if put together, make gutka or paan masala. The FDA officials have also asked civic officials to be vigilant and inspect vehicles for inter-state trafficking of gutka and paan masala.

Wal-Mart adds DNA tests in China after donkey-meat recall

Wal-Mart withdrew all products from vendor Dezhou Fujude Food Co, after fox DNA was identified in samples
New York: Wal-Mart Stores Inc. said it’s adding DNA tests of meat it sells in China after recalling donkey products from a local supplier that authorities said contained fox DNA. 
Wal-Mart withdrew all products from vendor Dezhou Fujude Food Company Ltd, after fox DNA was identified in samples, the retailer said on Friday in a statement. Yucheng, China authorities put Dezhou Fujude officials in criminal detention, and Wal-Mart is considering legal action, according to the statement. 
Wal-Mart said it’s offering compensation to customers and that the testing it’s adding goes beyond what is legally required in China. The world’s largest retailer had previously increased safety measures after contamination and mis-labeling incidents, including a 2012 citation by regulators for selling sesame oil and squid with hazardous levels of chemicals. 
“Walmart will spare no effort in fulfilling its obligations as a retailer and in working with government authorities in their investigation,” Greg Foran, the company’s China president, said in the statement on Friday. “Walmart commits to further enhance sample testing in the future.” 
Calls to the publicity department of Yucheng police bureau seeking comment went unanswered. An official at Fujude’s general office who asked not to be identified declined to comment. 
Last year, Wal-Mart said it would invest 100 million yuan ($16.5 million) over three years to upgrade food safety in China by adding a mobile food-inspection program and increasing supplier training.

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்

தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.
சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு 30.
பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம். தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.
மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம். மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது.
கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி 35 என்றால் காலாவதியான அரிசி கிலோ 5 முதல் 10க்கு
கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ
70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ 20
தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.
மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம். மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும் என்றார்.
ஆர். ஜெயலெட்சுமி
மாவு விற்பனை மூலம் அதிக லாபம்
வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ 30 தான். அப்போது கால் கிலோ உளுந்து 7.50.
இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு 10
தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் 20க்கு
5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது 400 லாபமாக கிடைக்கும் என்றார்.
புகார் வந்தால் நடவடிக்கை உறுதி
மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம். மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும் என்றார்.
பூஞ்சையுடன் உளுந்து, அரிசி
கெமிக்கல் பவுடர், சுகாதாரமற்ற தண்ணீர்
நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.