Dec 29, 2013

Health Dept collects 41 food samples from hotels, restaurants

Amritsar, December 28
Health Department has collected 41 food samples from various hotels and restaurants on the GT road here in the past two days. The team collected samples of curd, cheese, flour, sauces, samosa, cooked pulses, vegetables and common salt. 
The team inspected Sindhi Vinayk Food Corner, Itraf Dhaba, Jaan Restaurant, Grover Dhaba, Chopra Dhaba, Jumbo Dhaba, Babby Dhaba, Gursharan Dhaba and many other eating places. District Health Officer Dr Shivkaran Singh Kahlon said the team's focus was on dhabas and restaurants on the GT road. 
He said many of the general stores selling food ingredients were also inspected. He said all the samples have been dispatched to Food Testing laboratory and the reports would be received soon. 
Dr Kahlon said it has been found that many hoteliers have still not applied for the licenses or registration under the Food Safety and Standards Act. He said even those whose licenses have expired must get these renewed as the department would soon launch a drive to check unregistered hotels and restaurants. 
Dr Kahlon said the District Health Department has collected over 700 food samples from the district. He said till September this year, over 4,407 samples were collected from the entire state of which 514 were collected from Amritsar alone. 
He said of all the samples collected in the current year, over 300 had failed on quality parameters and department has initiated action against all the shops whose samples were found to be of substandard quality. He said the district department has secured permission from the state authorities in filling court cases against 33 shops whose samples were categorised as unsafe for human consumption by food testing laboratory.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் பான்பராக் பறிமுதல்


ஆவடி, டிச. 29 : 
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஹன்ஸ் மற்றும் பான்பராக் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். 
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் காமராஜர் நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருள்களான ஹன்ஸ், பான்பராக் ஆகியவை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செந்தில் முருகனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனை அடுத்து அவரது தலைமையில் அம்பத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வெங்கடேசன், கார்மேகம், ஜெயசந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹன்ஸ், பான்பராக் மூட்டை மூட்டையாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1.2 டன் எடையுள்ள அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அத்திப்பட்டு குப்பைக்கிடங்குக்கு எடுத்து சென்றனர். அங்கு தீவைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். 
உரிமையாளர் சரவணனுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஈரோடு, டிச. 28: 
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்ய புகையிலை விற்பனை பரவலாக நடந்து வருவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு பஸ்நிலையம், நாச்சியப்பா வீதி, மேட்டூர் ரோடு, கொங்காலம்மன் கோயில் வீதி பகுதி கடைகளில் 4 குழுக்களாக பிரிந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
கொங்கலாம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் சிறுசிறு டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் புகையி லைப் பொருட்கள் சிக்கின. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், முருகன் கண்ணன், பூபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tobacco seized

Officials of the Food Safety and Drug Administration carried out raids in shops at Kongalamman street and Bus Stand on Friday and seized banned gutka, hans, pan masala and other chewable tobacco products worth over Rs. 5 lakh, said G. Karunanidhi, District Officer for Food Safety and Drug Administration said.