Apr 10, 2013

IRCTC food joints to open at metro stations this weekend


Now, IRCTC food joints at metro stations

New Delhi: Passengers travelling on Delhi Metro can now enjoy quality snacks and delicacies at reasonable rates with IRCTC opening its first set of food kiosks in the stations on green line this weekend.
Christened 'Food Track', these kiosks will offer light snacks like sandwich, samosa, burger, pizza, rolls to mini meals like rajma-chawal, chhole-chawal, kadi-chawal, etc.
The snacks will be served hot and packed, while mini meals will come served in microwave oven compatible sealed trays, an IRCTC official said. Each of these five food stalls is estimated to cater to over 5,000 commuters per day initially, he said.
The outlets will be opened at Paschim Vihar (East & West), Peera Garhi, Udyog Nagar and Surajmal Stadium stations. The official said only branded company food items and cooked items meeting Hazard Analysis and Critical Control Points accreditation with Food Safety and Standards Authority of India will be sold through the kiosks.
Indian Railway Catering and Tourism and Corporation (IRCTC) has already signed an MoU with DMRC to operate food joints at 130 Delhi Metro stations in the capital. IRCTC, a Railway PSU, used to serve food on board trains till a few years back when the services were taken back by the Railways with the new Catering Policy. Since then, it has spread its wings running cafeteria and food courts in various government offices and educational institutes.
Some of the popular IRCTC food joints are in Shastri Bhawan, Udyog Bhawan, South Block, Writers’ Building (Kolkata), IIM Indore, Delhi University etc. It has entered into catering business with the corporate sector with its opening of an ultra-modern central kitchen at Noida where it produces around 10,000 meals a day which are served to various MNCs, BPOs, and educational institutes in and around the satellite city. Central Kitchens are also being planned in Chennai, Bengaluru, Kolkata, the official said.

Dinathanthi


உணவு போக்குவரத்தாளர்கள் குடிநீரை கையாளும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள்:

1. குடிநீரை கொண்டு செல்லும் வாகனங்களில் ஏதேனும் உடைந்த பலகைகள், கூரிய அல்லது வெட்டும் தன்மை உடைய பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
2. குடிநீரை பாதிக்கக் கூடிய வகையில் வண்டியின் கூரையில் ஓட்டை அல்லது வண்டி உட்புறத்தில் துரு ஏதேனும் இல்லாமல் இருக்க வேண்டும்.
3. வண்டியின் உட்புறம் துர்நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. சிமிண்ட், மர தூசி, மணல், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவற்றை கையாளும் வாகனங்கள் குடிநீரை கொண்டு செல்வதால் குடிநீரை எளிதில் பாதிக்கும். எனவே, சிமிண்ட், கறை, தூசு, தண்ணீர், சாயம் இவை இல்லாமல் வண்டிதளம் சுத்தமாக காய்ந்த நிலையில் இருத்தல் வேண்டும். அவ்வாகனங்களை குடிநீரை கொண்டு செல்ல தவிர்க்க வேண்டும்.
5. உணவினை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதுமான தார்ப்பாய்கள் தரமாகவும், அவை தரை தளத்திற்கும், குடிநீர் கேன்களை மேல் மூடுவதற்க்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.
6. குடிநீரை பாதிக்காமல் கயிற்றுத்தடம் அல்லது அடையாளம் ஏற்படாமல் இருக்க “L” வடிவில் தடுப்பான்கள் வாகனத்தில் இருக்க வேண்டும்.
7. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் இருக்க கூடாது.
8. எடை குறைந்த குடிநீர் பாக்கெட்டுகள் மீது அதிக எடை உள்ள குடிநீர் கேண்களை அடுக்கக்கூடாது.
9. எல்லா வகை குடிநீர் கேண்களை பெட்டிகளில் நேரான முறையில் அடுக்கப்பட வேண்டும்.
10. தினசரி போக்குவரத்தின் போது எடுத்து செல்லும் குடிநீர் கேண்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகள் போன்றவற்றின் அளவு குறித்த தினசரி பதிவுகளுடன் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.
11. வாகனங்கள் போதிய காலமுறை இடைவெளியில் சுத்தம் செய்து, தொற்று நீக்கம் செய்யப்பட்டு, அதன் விவரங்கள் பதிவு செய்து பராமரித்தல் அவசியம்.
12. குடிநீரை எடுத்து செல்லும் பணியாளர்கள் பாதுகாப்பான குடிநீரின் முக்கியத்துவம் குறித்து அடிப்படை கருத்துக்கள் தெரிந்து இருத்தல் அவசியம்.
உணவு பாதுகாப்பு அலுவலர்
திண்டுக்கல் வட்டம்

மினரல் வாட்டர் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட தோட்டனூத்து ரோட்டில் உள்ள ஸ்படிகம் மினரல்வாட்டர் கம்பெனி மற்றும் சென்னமநாயக்கன்பட்டி எஸ்ஏபி.மினரல் வாட்டர் கம்பெனியில் குடிநீரை கையாளும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் நடந்தது. திண்டுக்கல், குஜிலியம்பாறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், சகுபர்சாதிக் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
தன்சுத்தம், குடிநீரின் தரம், இயற்பியல், வேதியியல், மைக்ரோ&பயாலஜி வரையறுக்கப்பட்ட ஆய்வக அளவுகள், பதிவேடுகள் பராமரிப்பு, பேக்கிங் செய்யப்படும் பாட்டில், கேன், பாட்டில்களின் அங்கீகரிக்கப்பட்ட தர அளவீடுகள், அதனை கிருமி தொற்று நீக்கம் செய்வது, லேபிள்விளக்கம் மற்றும் கம்பெனி உட்புற, சுற்றுப்புற சுகாதாரம், குடிநீரைக் கொண்டு செல்லும் வாகன பராமரிப்பு குறித்து விளக்கப்பட்டது.
குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன ஆலை பணியாளர்கள், குடிநீர் வர்த்தகம் செய்வோர், வாகன ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன இயக்குநர்கள் மனோகரன், மகேஸ்வரன், பூர்ணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்தால் நடவடிக்கை: அமைச்சர் வி.மூர்த்தி

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் வி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.
பால்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி பேசியது:
பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்தாக முட்டை வழங்குவதுபோல, பால் வழங்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கும், குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பால் வழங்க ஆவன செய்ய வேண்டும். ஆவின் பால் தரமாக இருக்கின்றன. அதனை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
அதேசமயம் தனியார் பால் விற்பனை அதிகம் நடக்கிறது.
ஆவின் பாலைவிட தனியார் பாலின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அடர்த்திக்காக சில பொருள்கள் கலப்படம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
அமைச்சர் வி.மூர்த்தி: பாலில் கலப்படம் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் இந்த ஆய்வு நடைபெறுகிறது. நடமாடும் ஆய்வுக் கூடங்களும் பாலில் செய்யப்படும் கலப்படம் தொடர்பாக ஆய்வு செய்கின்றனர்.
அப்படிக் கலப்படம் செய்தால் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): தனியார் நிறுவனங்களில் பாலில் அடர்த்தி வருவதற்காக சீனாவின் வெள்ளைத் தூளைக் கலக்கின்றனர். இது உடல் நலத்துக்குக் கேடானது. அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வி.மூர்த்தி: நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் நிறுவனத்தைக் குறைகூறும் உறுப்பினர்கள், ஆவின் பால் தரமானது என்று விளம்பரம் செய்யத் தவறாதீர்கள்.
அ.செளந்திரராஜன் (மார்க்சிஸ்ட்): சீனாவில் பாலில் கலப்பிடம் செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது. அந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

63 staffers take ill after breakfast at company canteen

PUNE: As many as 63 employees of Hyundai Construction, a multinational construction equipment manufacturing firm based in Chakan, took ill after eating at the company's canteen early on Monday. They were rushed to a nearby private hospital and are likely to be discharged soon.

"The employees complained of vomiting, abdominal pain, dehydration and giddiness soon after eating poha at the company's canteen. They were rushed to our hospital around 9.30 am. One person is in ICU while the rest needed basic medical care. The condition of the man in ICU is stable. Most of them are likely to be discharged by evening," said Satyajeet Wadhavkar, chief medical officer of Pavana Hospital, located at Somatane Phata in Maval. The admitted people are in the 25 to 35 age group.

M S Thorat, sub-inspector of Chakan police station said, "Employees found two dead rats in the container in which poha was prepared. We have not yet registered a case. Our investigation is on."

Meanwhile, a team from the Food and Drugs Administration (FDA), Pune, visited the company canteen and took statements of employees. "Our officials will send food samples to the lab," said FDA joint commissioner Shashikant Kekare.

The company's head of human resource Nandakishore Sharma told TOI, "Today, about 63 employees showed signs of uneasiness and complained of nausea due to unhygienic substance found in the breakfast. The affected employees were rushed to a hospital. All employees will be discharged by evening." The management of Hyundai Construction has terminated the services of the caterer. " Hyundai Construction Equipment India Pvt. Ltd. is committed to employees' good health, safety and a conducive work environment," he said.

மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி!

ரூ.5 கூடுதலாக கொடுத்து வாங்கினாலும், மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் கடலூரில் உள்ள மதுக்கடையில் பிராந்தி வாங்கிய இளைஞர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்தவர் காதர் (30). இவர் கடலூரில் தங்கி ஹோட்டலில் வேலைப் பார்த்து வருகிறார்.
இவர் செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் பஸ் நிலையம் அருகே கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் பிராந்தி பாட்டில் வாங்கியுள்ளார்.
பாட்டிலை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மதுவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.
விற்பனையாளரிடம் காட்டினால் சமாதானம் செய்ய முயற்சிப்பர் என கருதி, செய்தியாளர்களை சந்தித்து மதுபாட்டிலை காட்டி விட்டு சென்றார்.  அப்போது அவர் கூறுகையில், "ரூ.70 குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.75 வாங்குகின்றனர். அதிலும் கரப்பான்பூச்சி கிடந்தது வேதனையை அளிக்கிறது' என்றார்.